Google
 

Adsense

சனி, 19 ஏப்ரல், 2008

ஒரு பெண்ணை தீவிரமாக பார்த்தமைக்கு 10 நாள் சிறைத்தண்டனை


இத்தாலியில் புகையிரதத்தில் பயணித்த ஒரு 30 வயது நிரம்பிய இளைஞன் அவன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த 55 வயது நிரம்பிய பெண்ணை தீவிரமாக பார்த்தமைக்கு 10 நாள் சிறைத்தண்டனையும் 40 யூரோ அபராதமும் நீதிமன்றில் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு 55 வயது நிரம்பிய அப்பெண்ணால் பாலியல் தொல்லையென தொடரப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும். .

வெள்ளி, 18 ஏப்ரல், 2008

2010ல் எல்லோரும் விண்வெளிக்கு போகலாம்


(Lynx) என்ற ஒரு அமெரிக்க நிறுவனம் இரு இருக்கைகள் கொண்ட விண்கலத்தை, விண்வெளி சுற்றுலாப்பயணிக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.இந்நிறுவனம் 2010ல் விண்வெளி விமானசேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

புதன், 16 ஏப்ரல், 2008

குப்பைத்தொட்டிகள் அவுஸ்ரேலியாவில் கண்காணிப்பு


அவுஸ்ரேலியாவின் கிழக்கு சிட்னி புறநகர்ப்பகுதிகளிலுள்ள புதிய 78,000 குப்பைத்தொட்டிகளில் சிறிய ரேடியோ ப்ரிகுவன்சி ரக்ஸ் (radio frequency tags) பொருத்தப்பட்டுள்ளன. அவை குப்பை மற்றும் மீள்சுழற்சி சம்பந்தமான தரவுகளை பெற உதவுகின்றன. இது ஒவ்வொரு விலாசத்துக்கும் எவ்வளவு குப்பை சேர்கின்றது என அறியவும் பயன்படுகிறது.

ஜப்பானிய கரடியின் சாகசம்

ஜப்பானிலுள்ள ஒரு மிருகக்காட்சிச்சாலையில், அங்கு வளர்க்கப்படும் ஒரு ஆசிய கறுப்பு நிறக்கரடி அங்கு வரும் ரசிகர்களை கம்புகளை சுற்றி சாகசம் காட்டி கவர்கின்றது.

உலகின் புதிய மிகப்பெரிய விமானசேவை


டெல்ரா விமானசேவை (Delta Airlines) நோர்த்வெஸ்ட் விமானசேவையை (Northwest Airlines) மூன்று பில்லியன் டொலருக்கு வாங்கியது.இக்கொள்வனவின் மூலம் டெல்ரா விமானசேவை உலகின் மிகப்பெரிய விமானசேவையாக உருமாறியுள்ளது. இக்கொள்வனவிற்கான் காரணம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவும் மற்றும் எரிபொருளின் விலையேற்றமுமே எனக் கூறப்படுகிறது.

செவ்வாய், 15 ஏப்ரல், 2008

நுரையீரல் இல்லாத தவளை கண்டுபிடிப்பு


இந்தோனேசியாவிலுள்ள போனியோ தீவிலுள்ள நன்னீரோடையில், முதன்முதலாக நுரையீரல் இல்லாத தவளை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும்,இத்தவளை நுரையீரல் இல்லாததால் முற்றுமுழுதாக அதன் தோலினால் சுவாசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

திங்கள், 14 ஏப்ரல், 2008

உலகின் மிகப்பெரிய பாபிகியு(Barbeque)



உலகின் மிகப்பெரிய சுமார் ஓரு மைல் நீளமான பாபிகியு உருகுவேயில் ஏப்ரல் 13, 2008 ல் இடம்பெற்றது.இதில் ஓரே நேரத்தில் ஆயிரக்கணக்கான உருகுவே நாட்டவர்கள் கின்னஸ் சாதனைக்காக முயற்சிக்காக பங்குபற்றினர்.

சனி, 12 ஏப்ரல், 2008

$2.7 மில்லியனுக்கு ஒட்டகம் விற்பனை

அபுதாபியில் இடம்பெற்ற பாலைவன விழாவில் $2.7 மில்லியனுக்கு ஒட்டகம் ஒன்றை டுபாயின் இளவரசர் வாங்கினார். அப்பாலைவன விழாவில் ஒட்டக அழகுத்தேர்வு இடம்பெற்றது.அதில் ஆயிரணக்கணக்கான ஒட்டகங்கள் பங்குபற்றின. சிறந்த ஒட்டகம் ஒன்றை வாங்குதல் பர்சிய வளைகுடாவில் ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.

வியாழன், 10 ஏப்ரல், 2008

2050 இல் நகர வாழ்க்கை

1991 இல் டுபாய்














2005இல் டுபாய்




இவ்வுலகின் சனத்தொகையின் பெரும்பான்மையான மக்கள் எதிர்காலத்தில் நகரத்தில் வாழ்வார்களென கணிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 50 வருடங்களில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நகரத்தில் வாழ்வார்களென கணிப்பிடப்பட்டுள்ளது. ஆறு பின்வரும் பிரபல வல்லுனர்கள் 2050 இல் நகர வாழ்க்கையை எதிர்வுகூறியுள்ளனர்.

§ Hank Dittmar, Prince's Foundation for the Built Environment
§ Stephen Graham, human geographer and author of The Cybercities Reader
§ Michael Dear, author of The Post-modern Urban Condition
§ Walden Bello, director of Focus on the Global South
§ Professor Nigel Thrift, author of Cities: Reimagining the Urban
§ Saskia Sassen, author of Territory, Authority and Rights: from Medieval to Global

நன்றி BBC
Chanthru Info

செவ்வாய், 8 ஏப்ரல், 2008

டயானா தீர்ப்பு: இளவரசி அசட்டையான வாகன ஓட்டத்தால் சட்டவிரோதமாக கொல்லப்பட்டார்.













டயானாவின் கொலை சம்பந்தமான தீர்ப்பு 07/04/2008 நீதிமன்றால் வழங்கப்பட்டது. அவர்களின் சாவுக்கு சாரதியின் அசட்டையான வாகன ஓட்டம் மற்றும் அவர்கள் இருக்கைப்பட்டி அணியாமையும் காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நடைபெற்ற வழக்கு இறுதியாக முடிவுற்றது.
Chanthru Info

திங்கள், 7 ஏப்ரல், 2008

HSBC 370,000 வாடிக்கையாளர் விபரங்களை தொலைத்தது

HSBC 370,000 வாடிக்கையாளர்களின் விபரங்களைக்கொண்ட குறுந்தட்டை அலுவலகங்களுக்கிடையே பரிமாறுகையில் தொலைத்தது.

அக்குறுந்த்தட்டானது வாடிக்கையாளர்களின் பெயர் விபரம், பிறந்த திகதி, காப்புறுதி விபரத்தை கொண்டு இருந்தது.
மேலும் அக்குறுந்தட்டில் வங்கிக்கணக்கு மற்றும் விலாசங்கள் இல்லையென HSBC பேச்சாளர் தெரிவித்தார்.

Chanthru Info

உலகின் இளம் பில்லியனர் FaceBook நிறுவனர்



பிரபல நட்புறவு இணையதளங்களில் ஒன்றான Facebook தளத்தின், நிறுவனரான 23 வயது இளைஞர் மார்க் உலகின் இளம் பில்லியனர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ், 2008ம் ஆண்டுக்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், Facebook தளத்தின் நிறுவனருமான மார்க் சுக்கெர்பெர்க்கின் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் தற்போதுள்ள பில்லியனர்கள் வரிசையில் இவர் தான் மிகவும் இளையவர் என்றும், பில்கேட்சைப் போலவே, இளம் வயதில் சொத்துகள் அனைத்தையும் தனித்து சம்பாதித்துள்ளார் என்ற வகையிலும் இவர் சரித்திரம் படைத்துள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் இதழின் இணை ஆசிரியர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.ஃபேஸ்புக் தளத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பங்குகளின் மொத்த மதிப்பு 5 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.இதில் 30 சதவீத பங்குகளை பெற்றுள்ளதால், மார்க் உலகின் இளம் பில்லியனர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chanthru Info

ஐ-பொட் / செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்தவர்களுக்காக...!

செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்த அனுபவம் நிறையப் பேருக்கு உண்டு. தானாகவே யாரும் நனைக்கமாட்டோம். எனினும் எதிர்பாராதவிதமாக இது நடந்துவிட்டிருக்கும். அப்போது என்ன செய்யலாம்?

1) முதலில் செல்பேசியின் மின்னிணைப்பைத் துண்டிக்கவும்.

2) செல்போனை நன்றாக ஒரு உறையிலிடவும்.

3) ஒரு கிண்ணம் முழுவதும் 'அரிசி' யை எடுத்துக்கொள்ளவும். அரிசியானது ஈரப்பதத்தை முழுவதும் உறிஞ்சக்கூடிய ஒரு பொருளாகும். (சமைக்கப்படாத அரிசி மட்டுமே இந்தச் செய்முறைக்கு உதவும்)

4) உறையிலிட்ட செல்பேசி / ஐ-பொட் ஐ இந்தக் கிண்ணத்தில் உள்ள அரிசிக்குள் 24 மணிநேரம் வைத்திருக்கவும்.

5) செல்பேசி / ஐ-பொட்டின் - மின்கலங்களை (பேட்டரி) தனியாக வேறொரு அரிசிக்கிண்ணத்தில் வைப்பது உத்தமம்.

6) ஒட்டுமொத்த ஈரப்பதமும் துப்புறவாக உலர்வதற்கு 24 மணிநேரமாவது தேவைப்படும்.

7) அடுத்த நாள் உங்களது தண்ணீரால் நனைக்கப்பட்ட கருவி அற்புதமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

Chanthru Info